கர்மா...

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும்
ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம்
ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க
வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே
இப்பதிவு .

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினைஎனப்படுவது.

 அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு.

அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால்

ஒரு உதாரணத்தைபார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம். இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதைவினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான எதிர்வினை செயல்படும். எப்படியென்றால் நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்பது ஒரு விதி செயல்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன் தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு மாடோ அல்லது வண்டியோ உங்களை
குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால் பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில்
அடிபட்டுவிடும். ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லதுமருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம்

இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

 அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.
ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில் அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்றது.

இதைதான் " தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள்.

அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை.

இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்" என்பதை விட்டுவிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?