எண்ணம் போல் வாழ்க்கை...!
வாசலில் ஒரு யாசகன் நின்றிருந்தான்..
அம்மா..தாயே...தர்மம் பண்ணுங்கம்மா..
அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்தாள்..
வெளியே வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகளை அழைத்து அவள் கைகளில் அரிசியை அள்ளி கொடுத்து
யாசகன் பாத்திரத்தில் இட சொன்னாள்...
பெற்று கொண்ட....யாசகன் பக்கத்து வீட்டுக்கு யாசகம் கேட்க சென்றான்..
அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தன் மகளை கூப்பிட்டு அவள் கைகளில் அரிசியை கொடுத்து யாசகனுக்கு அளிக்க சொன்னாள்...
காலங்கள் உருண்டோடியது..
இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது..
சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களாகினர்...
அவர்கள் தாய் காட்டிய வழியில் தர்மமும் தொடர்ந்தது..
ஒரு நாள் அந்த முதிய பெண்மணிகள் இறந்து வானுலகம் சென்றனர்.
அங்கே அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது.. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது...
உடனே அவள் ...இறைவனிடம் முறையிட்டாள். இருவருமே ஒரே மாதிரி தானம் செய்தும் ஏனிந்த பாரபட்சம் என்று வாதிட்டாள்..
அதற்கு இறைவனோ... முதலாமவள் தனக்கு பிறகு தன் குழந்தையும் இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை கையால் தானம் இட்டாள்.. ஆனால் நீயோ..உன் கைகளால் எடுத்தால் நிறைய அரிசி செலவாகும் என உன் குழந்தை கையால் தானமிடச் செய்தாய்...
இருவர் செயலும் ஒன்றே..எனினும் எண்ணங்கள் வேறு வேறு...என்றார்...
எந்த செயலை செய்தாலும் மேலான எண்ணங்களோடு செய்யும் செயலே உயர்வுக்கு வழி காட்டும்..
சுயலாபத்துக்கு செய்யும் செயல்களை விட பிறர் நலத்துக்கு செய்யும் செயல்களே இறைவனின் தராசில் உயர்ந்து நிற்கும்...

Comments
Post a Comment