Posts

*ஸ்வர்ண கௌரி விரத மஹிமை*

Image
ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். இந்த விரதம் கடைபிடிப்பதற்கான கதையை விரிவாக கீழே பார்க்கலாம் இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.. ஒரு முறை, கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார்.. முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர்.. அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.. ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் கு...

கீதையும் 18 அத்தியாயங்களும்

Image
  கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. 1 காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 2 குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 3 லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 4 மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 5 மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் ...

பெண்மையை போற்றிய தமிழ் இலக்கியங்கள்

Image
  ஓர் அழகிய இளம் மங்கை.  அவளுக்கு முதிர்ந்த கணவன்.  மனமுவந்து வாழ்கிறாள்.  ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.  அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை.  பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.  ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.   தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். *இது நளாயினி கதை*.  *இது வட மொழி இலக்கியம்*.. தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.  தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,  தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -  *இது சிலப்பதிகாரம்*. அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். ...

கும்ப ஸ்தாபனம்

Image
  🔥சர்வம் சிவமயம்🔥 கும்பம் என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். சர்வம் சிவமயம்          

சோடசக்கலை நேரம் என்றால் என்ன?

Image
எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர். ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்) மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன . சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். *16 வதாக ஒரு கலை இரு...

"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்"

Image
"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்" பெரியவாளுக்கு வந்து நமஸ்காரம் செய்தாள் ஒரு பக்தை. "பெரியவா...... மனுஷாளுக்கு.... பணம், புகழ், ஆயுஸ் எல்லாமே வேணும்தான்! ஆனா, எல்லாம் இருந்தும், ஒடம்பு ஆரோக்யமா இல்லேன்னா ப்ரயோஜனமில்ல....  நன்னா ஆரோக்யமா இருக்கறதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்..... ஸ்லோகமோ, வேற பாராயணமோ, கோவில் கோவிலா போகறதுக்கோ.... எனக்கு நேரமேயில்ல பெரியவா! simple-ஆ... என்னால ஆகக்கூடியதா பெரியவாதான் வழி காட்டணும்" எளிமையான பஞ்சிலிருந்து, எளிமையான ஆனால் ஹிதமான, நன்மையை மட்டுமே தரும் பருத்திதானே வரும்? அதே போல், எளியனான, ஸர்வ ஸுலபனான பகவானான பெரியவாளிடமிருந்தும்...... பக்தையை முன்னிட்டு, தறிகெட்டலைய மட்டுமே நேரம் இருக்கும் நமக்காக...... எளிய, மிக மிக ஸுலபமான உபதேஸம் சட்டென்று உதிர்ந்தது. "இதென்ன பெரிய விஷயம்? ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ....ன்னு தெனோமும் 12 தடவை சொல்லிட்டு, கெழக்கப் [கிழக்கு]  பாத்து, 12 நமஸ்காரம் பண்ணு! போறும்......" திருக்கரம் உயர்ந்து அபயமும், ஆஶீர்வாதமும் தந்தது. "பெரியவா சொன்னதை.... நானும், குடும்பத்துல எல்லா...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

Image
    5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்      நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர்.     இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.     பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.       மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.         ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...     1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.      [பாகவத புராணம் 12.2.1]     2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.      மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல...