திருவண்ணாமலை கிரிவலம்...!
திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் புண்ணியமும்... & கிரிவலம் வரும் முறையும்..
1. பிறவா நிலையை அடையலாம்.
2. ஆயிரம் வேள்விகள் செய்த பலன் கிடைக்கும்.
3. காசி போன்ற உயர்ந்த தலங்களில் வாழ்ந்து பலகாலும் வழிபாடு செய்த புண்ணியத்தை ஒருமுறை வலம் வருவதால் பெறலாம்.
4. எல்லாவகையான தீவினைகளும் அழிந்துவிடும்.
5. நீண்ட காலம் அருந்தவம் செய்த புண்ணியம் பெறலாம்.
6.பெரும் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், மன நலம், நல்ல உறவினர்கள் ஆகிய நலன்களை பெறலாம்.
7. கோள்களும், எமனும் விலகிச்செல்வார்கள்.
மலையை வலம் வரும் முறை
மேலே கூறியுள்ள நலன்களை பெறுவதற்கு யார்தான் விரும்ப மாட்டார்கள், பயன் பெற வேண்டுமானால் மலையை வலம் வரும் முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
1.நீரால் உடல் தூய்மை செய்து கொள்ள வேண்டும் (குளித்தல்).
2.தூய்மையான எளிய ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும்.
3 .திருநீறும் உருத்திராக்கமும் அணிதல் வேண்டும்.
4 .ஆண்கள் மேலாடையின்றி இடுப்பில் துண்டு உடுத்தி வலம்வருதல் புண்ணியம் தரும்.
5. குடை ,மிதியடி அணிதல் கூடாது.
6. வாகனங்களில் வலம் வருதல் கூடாது.
7.வெற்றிலை, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
8. தீய எண்ணங்கள் ஏதுமின்றி கூப்பிய கரங்களுடன் வலம் வருதல் வேண்டும்.
9. பால், பழம் அருந்தி வலம் வரலாம் இயலாதவர்கள் சிற்றுண்டி அருந்தி வரலாம்.
10. சிவ சிந்தனையுடன் வலம்வருதல் அவசியமாகும்.
11 .சிவ நாமாவளியை (சிவாயநம, நமசிவாய) சொல்லிக்கொண்டே வலம் வருதல் வேண்டும்.
12. உலக கதைகளையெல்லாம் பேசிக்கொண்டே வலம் வருதல் பயன் விளையாது.
13. இயன்ற அளவில் தான ,தருமங்களை செய்து கொண்டு வலம் வரலாம்.
14.உமாதேவியார், முருகன் ,விநாயகர் முனிவர்கள், யோகிகள் தேவர்கள் ,தேவதைகள் திருமால், இந்திரன்,அக்னி, யமன், நிருதி, வருணன் வாயு ,குபேரன் ,ஈசானன் சந்திரன், சூரியன் ஆகியோர் மலையைச் சுற்றி சிவலிங்கங்களை நிறுவி வழிபாடு செய்து உள்ளார்கள். அச்சிவலிங்கங்களை வணங்கி கொண்டு வலம் வருதல் நலம் பயக்கும்.
15. வேகமாக நடவாமல் சாதாரணமாக நடந்து வலம் வருதல் வேண்டும்.
16.திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமான் அருளிய திருஅண்ணாமலை பதிகங்களை *நமது ஐயா அவர்கள் "சிவராத்திரி மற்றும் பிரதோச வழிபாட்டு பாடல்கள்" என்னும் நூலில்* வெளியிட்டிருக்கின்றார்அந்த நூலில் இருக்கின்ற பதிகங்களை அண்ணாமலை அண்ணலை அருளாளர்கள் மூலம் அருளிய இப்பதிகப் பாடல்களை வாய்விட்டு பாடி பாடிய வண்ணம் வலம் வந்து எல்லா நலன்களையும் பெறலாம்.
( தனியாகவோ அல்லது குழுவாகவோ பாடிக்கொண்டு வளர வரலாம் மேலான பலன் கிடைக்கும்)
" *ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே* "
திருச்சிற்றம்பலம்

Comments
Post a Comment