Posts

Showing posts from January, 2020

எந்த மதத்திலும் இல்லாத பெருமை..!

 ஹிந்து மதக்கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்... 1. தாயாக = அம்மன் 2. தந்தையாக = சிவன் 3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன் 4. குருவாக = தட்சிணாமூர்த்தி 5. படிப்பாக = சரஸ்வதி 6. செல்வமகளாக = லக்ஷ்மி 7. செல்வமகனாக = குபேரன் 8. மழையாக = வருணன் 9. நெருப்பாக = அக்னி 10. அறிவாக = குமரன் 11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி 12. உயிர் மூச்சாக = வாயு 13. காதலாக = மன்மதன் 14. மருத்துவனாக = தன்வந்திரி 15. வீரத்திற்கு = மலைமகள் 16. ஆய கலைக்கு = மயன் 17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன் 18. ஊர்க்காவலுக்கு = ஐயனார் 19. வீட்டு காவலுக்கு = பைரவர் 20. வீட்டு பாலுக்கு = காமதேனு 21. கற்புக்கு = சீதை 22. நன் நடத்தைகளுக்கு = ராமன் 23. பக்திக்கு = அனுமன் 24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி 25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன் 26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன் 27. மொழிக்கு = முருகன் 28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன் 29. தர்மத்திற்கு = கர்ணன் 30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு 3...

63 நாயன்மார்கள்

01.பெயர் : திருநீலகண்டர் பிறந்த ஊர்: சிதம்பரம் பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகை முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம் 02.பெயர் : இயற்பகையார் பிறந்த ஊர்: பூம்புகார் பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, பூசம் முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, உத்திரம் 03. பெயர் : இளையான்குடி மாறனார் பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை) பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, சதயம் முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மகம் 04. பெயர் : மெய்ப்பொருளார் பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்) பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்தம் முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம் 05.பெயர் : விறல்மிண்டர் பிறந்த ஊர்: செங்குன்றூர் பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம் முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, திருவாதிரை 06.பெயர் : அமர்நீதியார் பிறந்த ஊர்: பழையாறை பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, பூரம் 07.பெயர் : எறிபத்தர் பிறந்த ஊர்: கரூர் பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, ...

கடும் சோதனைகள் வருவது ஏன் ...? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?

சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல. மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... ! எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ? வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல...

சிவன் குடும்பம் சொல்லும் தத்துவம்....

சிவன் என்றால் இன்பம் என்று பொருள்! ஆனால் சிவனின் குடும்ப வாகனங்களைப் பாருங்கள். அவை ஒன்றுக்கொன்றுபகை !                                                                                                 பிள்ளையாரின் வாகனம் எலி.முருகனின் வாகனம்  மயில். இந்த இரண்டு வாகனங்களுக்கும்  சிவனின் ஆபரணம் பாம்பு பகை !                       தேவி பராசக்தியின் வாகனமான சிங்கம்,    சிவனின் வாகனமான  நந்திக்குப் பகை ! ஆனாலும், சிவனின் குடும்பம் இன்பமயமானது ! இதுதான்   வாழ்க்கையின்  தத்துவம் ! பல துன்பங்களுக்கு நடுவிலும், மாறுபட்ட  கருத்துக்களுக்கு இடையிலும், நாம்  சந்தோஷமாக வாழ முடியும் என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது  சிவன் குடும்பம் !       ...

கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்?

 கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும்.  பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார். இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் ...