Posts

Showing posts from November, 2019

கண் திறந்த அம்மன்...!

 கர்நாடகா மாநிலத்தில் உள்ள உப்பிலி அம்மன் டூர் என்ற ஊரில் ஸ்ரீராம என்ற கோவிலில் உள்ள ஸ்ரீநல்லம்மாள் என்கின்ற அம்மனின் வெள்ளி கண் மலரை நேற்று இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். மறுநாள் காலையில் பூசாரி நடைதிறந்ததும் அம்மனின் கண்கள் சுயமாக இருந்தது கண்டு அனைவரும் அதிசயத்தனர் . அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த அதிசயத்தை கண்டு மகிழ்ந்தனர்.

30 வினாடிகளில் ராமாயணம்...!

Image
தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா? என்றால் ... நிச்சயம் முடியும் எப்படி? காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....! || ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் || || சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் || || அங்குல்யா பரண சோபிதம் || || சூடாமணி தர்சனகரம் || || ஆஞ்சநேய மாஸ்ரயம் || || வைதேஹி மனோகரம் || || வானர சைன்ய சேவிதம் || || சர்வமங்கள கார்யானுகூலம் || || சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் || ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம் இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது. நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்.......... இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.

1008 லிங்கம்...!

Image
1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி  லிங்கம் 10 அங்கி  லிங்கம் 11 அங்கு  லிங்கம் 12 அசரிய  லிங்கம் 13 அசுர  லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக  லிங்கம் 16 அச்சு  லிங்கம் 17 அஞ்சா  லிங்கம் 18 அட்ட  லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை  லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி  லிங்கம் 23 அடி  லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட  லிங்கம் 26 அணி  லிங்கம் 27 அணு  லிங்கம் 28 அத்தி  லிங்கம் 29 அதழ்  லிங்கம் 30 அதிபதி  லிங்கம் 31 அதிர்ஷ்ட  லிங்கம் 32 அதிய லிங்கம்  33 அதிசய  லிங்கம் 34 அதீத  லிங்கம் 35 அந்தார  லிங்கம் 36 அந்தி  லிங்கம் 37 அநந்தசாயி  லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக  லிங்கம் 40 அப்ப  லிங்கம் 41 அப்பு  லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி  லிங்கம் 44 அபிநய  லிங்கம் 45 அபிஷேக  லிங்கம் 46 அம்பல  லிங்கம் 4...

ஹிந்துக்கள் ஏன் கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

Image
கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ??? பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ??? கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ???? மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ???? உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ??? எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள். இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன. கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க. மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும்...

வெற்றி எனக்குத்தான்!

Image
பீஷ்மரின் முகத்தில் கடும் கோபம் தென்பட்டது. அந்த நள்ளிரவில், போர்க்களத்தில் உள்ள பாசறையில், அகல்விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், தன்னைத் தேடிவந்த துரியோதனனையே அவர் விழிகள் கூர்மையாகப்பார்த்தவாறிருந்தன. ஆனால்,அவர்கள் இருவரையும் வேறு இரு விழிகள் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை. பீஷ்மர் துரியோதனனைப் பற்றிச் சலிப்படைந்தார். "என்ன மனிதன் இவன்! ஒன்று தன்னை நம்பவேண்டும். இல்லாவிட்டால் தன்னை நம்பாமல் விட்டுவிட வேண்டும். பாரதப் போர் உக்கிரமடைந்து வரும் இத்தருணத்தில் மனத்தில் ஊசலாட்டத்தோடு இவன் பேசும் பேச்சு, எத்தனை முட்டாள்தனமானது! இவனுக்குத் தன் நிலையை எப்படிப் புரிய வைப்பது?' துரியோதனன் மீண்டும் சொன்னான்: ""பீஷ்ம பிதாமகரே! யுத்தத்தில் ஒரே கணத்தில் எதிரிகள்அனைவரையும் கொன்றழிக்க உங்கள் ஒரே ஒருவரால் முடியும். நீங்கள் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு ஆயிரம்யானைபலம். ஆனால்...'' ""என்ன ஆனால்?'' ""நீங்கள் எங்கள் அணியில் தான் இருக்கிறீர்களா என்பதுதான் என் சந்தேகம். போர் ஒவ்வொரு நாளாக வளர்கிறது. பஞ்சபாண்டவரில் இன...

சாமிசிலைக்கு காது கேட்குமா?

Image
கொஞ்ச நாள் முன்பு கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். அப்போது கணவன், மனைவி தன் ஒரு எட்டு வயது பெண் குழந்தையுடன் என் அருகில் நின்றிருந்தனர். அப்போது ஒருவர் சுவாமி சிலையை பார்த்து ஏதோ புலம்பிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை தன் தாயை பார்த்து சாமி சிலைக்குக் காது கேட்குமா? நாம் சொல்வது அவர் காதில் விழுமா! என்று கேட்டது. எனக்கு அப்போது அந்தக் குழந்தை கேட்பதிலும் ஏதோ ஓர் அர்த்தம் இருப்பதாகத்தோன்றியது. உண்மையிலேயே கல் சிலைக்கு காது கேட்குமா.  நாம் சொல்வது கேட்குமா என்பது தான். அப்போது அவர் கையில் உள்ள செல்போன் மணி அடித்தது. அதை எடுத்து அவர் ஹலோ யார் பேசுகிறது என்று கேட்கிறார். மதுரையில் இருந்து அவருடைய நண்பர் பேசுவதாகக் கூறுகிறார். சாதாரண அரை ஜான் நீளமுள்ள பிளாஸ்டிக் டப்பா இவர் சொல்வது மதுரையில் உள்ள ஒருவருக்குக் கேட்கிறது. அவர் சொல்வது இவருக்குக் கேட்கிறது. ஏதோ ஒரு சக்தி இவர்கள் இருவருக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல் தான் கடவுள் சிலையும் பக்தர்கள் கூறும் வேண்டுதல...

குழந்தை பிறப்பு வரையில் வணங்கவேண்டிய தெய்வங்கள் என்ன...?

வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு. 1முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம். 2-வது மாதம்: இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்கவேண்டும். 3-வது மாதம்: குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 4-வது மாதம்: குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும். 5-வது மாதம்: குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கவேண்டும். 6-வது மாதம்: குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேய...

அவிநாசி சிவனின் அற்புதங்கள்......!

Image
""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி. ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார். இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் ...

இது துவக்கற கல் இல்லே… சிவலிங்கம்!!!

Image
சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங்கலில்தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார். அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ”இ...

செல்லும் காரியம் ஜெயமாக மந்திரம்.....

Image
ஒரு வேளையாக வெளியே கிளம்பும் போது கிழக்கு முகமாக நின்று ஜெபிக்கவும். "வனமாலீ கதி சார்ங்கீ ச்ஙகீ சக்ரீச நந்தகீ ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோபி ரக்ஷது"

காந்தாரியின் கனவு...! தெரிந்த புராணம் தெரியாத கதை..!

Image
“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா? ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது. இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்! உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!” என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்து...

பார்பாரிக்கா...!தெரிந்த புராணம் தெரியாத கதை..!

மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!! எல்லாம் மாதவன் செயலே.. ! தெரிந்த புராணம் தெரியாத கதை..! பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன். கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா. .தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார். முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும். இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும். மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும். மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும். இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான். தாயிடம் ஆசிப் ...

இஷ்ட காமேஸ்வரி...!

Image
நம் நியாயமான கோரிக்கைகளை, அபிலாஷைகளை நிறைவேற்றும் தேவி. ஸ்ரீ சைலக்ஷேத்ர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் காட்சியளிக்கிறாள் இந்த அற்புததேவி. கோயில் காட்டுப் பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதனால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்களில், தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஜீப்களில் செல்வதற்கு முந்தைய நாளே பதிவு செய்து கொள்வது உசிதம். அடர்ந்த காட்டுப் பகுதி, முறையான சாலைகளோ, உணவுப் பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள் வழியே 11 கி.மீ., பயணம். தூரம் என்னவோ 11 கி.மீ.,தான். ஆனால், செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிறது. தண்ணீர், உணவுப் பொருட்கள், பூஜை சாமான்கள் எல்லாம் காட்டுக்குள் செல்வதற்கு முன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். காலையில் 9.30 மணிக்குதான் ஜீப்கள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஜீப்கள் நகரத் துவங்கியதும் நம் கண்முன் விரியும் இயற்கையின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆள் அரவமற்ற காடு, பருத்து, உயர்ந்து சூரியனையே மறைக்கும் மரங்கள், சட்டென்று நம் கண்முன் தோன்றும் குரங்கு...

“உலக அழிவு” பற்றி மகாபாரதம்....

“உலக அழிவு” பற்றி மகாபாரதம் பாரதத்தில் இல்லாதது எதுவும் இல்லை. “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்பது பெரியோர் வாக்கு. நம்மைப் போலவே பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கும் இதில் ஆர்வம் இருந்திருக்கிறது. இது ஒரு அதிசயமான, ஆர்வமூட்டும் விஷயம் என்று பீடிகை போட்டுவிட்டு, மார்க்கண்டேய முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கிறார் தர்மர்: தர்மங்களும் நற்குணங்களும் அழிந்தபின்னர் என்ன நடக்கும்? அப்போது மனிதர்கள் என்ன உண்ணுவார்கள், எப்படிப் பொழுதைக் கழிப்பார்கள்?, அவர்கள் எந்த அளவுக்கு பலம் உடையவர்களாக இருப்பர்? கலியுகம் முடிந்த பின்னர் கிருத யுகம் துவங்குமா? (தர்மரின் கேள்விகளை இந்தக் காலத்தில் படிக்கும்போது நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று எண்ணி வியக்க வேண்டியுள்ளது. அன்றாட உப்பு ,புளி, மிளகு பற்றிப் பேசாமல் இந்தப் பூவுலகின் தோற்றம், முன்னேற்றம், முடிவு குறித்து சிந்திப்பதை வேறு எங்கும் காண முடியாது. இந்துப் புராணங்களிலும் மகாபாரதத்திலும் மட்டுமே காண முடியும்) மார்கண்டேய முனிவரின் பதிலில் உள்ள ‘பாயிண்டு’களை மட்டும் பார்ப்போம்: 1.கிருத (சத்திய) யுகத்தில் ஏமாற்று...

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?

இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ? அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ க்ரிஷ்ணர் கீதையில் சொல்றார். பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர். இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க அர்த்தார்தி சொல்லப்படறவங்க... தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும். சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும். ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ... இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம.. கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு.. ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை.... இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க...

வாழை இலை....

வாழை இலையின்_நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே !! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?” புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம். இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம். இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம். அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி, வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன். ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும், அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் . அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான், இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் . வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும்,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும். “பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?” சிம்பிள் ... இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்....

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றோர்செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா? குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார். நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ர...

108 திவ்யதேசங்கள்...!

இந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் திருத்தலத்தின் பெயரும், அடைப்புக் குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது... 1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி) 2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி) 3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்) 4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி) 5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி) 6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி) 7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்) 8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி) 9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்) 10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுத...