திருநீலகண்டப்பதிகம்
பதிகச் சிறப்பு:-
*"திருநீல கண்டம்"* என்பது சிவபெருமானாருடைய கண்டத்தை (கழுத்தை) குறிப்பதாகும்.
*நீலகண்டம் என்பது *"சிவாயநம, நமசிவாய" என்பதைப் போல அதுவும் பெருமானுடைய திருநாமம் ஆகும்.*
இந்த திருநீலகண்டம் என்னும் திருநாமத்தைச் சொல்லியே *"திருநீலகண்ட நாயனார்"* முக்தி பெற்றார், ஆகவே இந்த பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் திருநீலகண்டம் என்று சம்பந்த சுவாமிகள் ஆணையிட்டு சொல்லியுள்ளார்.
🔆இந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் எந்தவிதமான நோய் தொற்றும், எந்தவிதமான காய்ச்சல்களும் அண்டாது.
மேலும் இப்பதிகத்தை நாம் சத்தமாக பாடுவதனால் அந்த ஒலி அலைகள் வீட்டில் உள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது.
பண் : வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
(1)அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்..
உய்வினை நாடாது இருப்பது உந்தமக்கு ஊனமன்றே...
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்...
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*
(2)காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்...
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்...
பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்...
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*
(3)முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்...
விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்ட விரிசடையீர்...
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்..
சிலைத்தெமைத் தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*
(4)விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்..
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே..
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்...
திண்ணிய தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*
(5)மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்..
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ...
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்...
செற்றெமைத் தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*
(6 -7)மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்...
பிறப்பில் பெருமான் திருந்தடி கீழ் பிழையாத வண்ணம்...
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்... சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*
(8)கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே...
உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்..
செருவில் அரக்கன் சீரில் அடர்த்து அருள் செய்தவரே...
திரு இலித் தீவினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*
(9)நாற்றமலர் மிசை நான் முகன் நாரணன் வாதுசெய்து...
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்..
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்..
சிற்றமதாம் வினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*
(10)சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்...
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்...
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடிபோற்றுகின்றோம்...
தீக்குழி தீவினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*
(11)பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்...
இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்...
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்...
நிறைந்த உலகினில் வானவர் கோ னொடும் கூடுவரே.
திருச்சிற்றம்பலம்
(பதிகம் முற்றிற்று)

Comments
Post a Comment