காணக்கிடைக்காத முருகர் வழிபட்ட இந்த பஞ்சலிங்க தரிசனம்...!

திருச்செந்தூரில் மூலவருக்குப் பின்னால் அமைந்துள்ள பாம்பறை என்னும் சுரங்க அறையில், சூரசம்ஹாரத்திற்குப் பின் முருகனால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்த பஞ்சலிங்கங்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும் இடத்தில் கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் உள்ளே குனிந்து செல்ல வேண்டும்.



இந்த குகைப்பாதை மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

கூட்டமாக இருக்கும் நாட்களில் இந்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில்லை.

காணக்கிடைக்காத முருகர் வழிபட்ட இந்த பஞ்சலிங்க தரிசனத்தை கண்டு பிறவி பலனை அடைவதற்காக அபூர்வமான காணொளிக்காட்சி
 
                                            ஓம் நமசிவாயா!

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?