Posts

Showing posts from February, 2020

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் !

Image
மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை. * நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும். * குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள்.  பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். * நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள். *எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அத...

ஆதி சங்கரரின் "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா"

ஆதி சங்கரரின் "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா" என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... : 1. எது இதமானது ? தர்மம். 2. நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. 3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். 4. கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். 5. எதிரி யார் ? சோம்பல். 6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. 7. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். 8. சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. 10. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது. 11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. 12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை. 13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். 14. எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. 15. எது இன்பம் தரும்...

திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி..... முருகன் இல்லை!

திருச்செந்தூர்_கோவிலின்_முதல்_மூர்த்தி..... முருகன் இல்லை! சிவபெருமான் தான்! சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்! முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம். முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன! மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்! ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவற...

உண்மையான அன்பு..!

உண்மையான அன்பு கண்ணீரில்  வெளிபடும் இறைவனிடம் கண்ணீருடன் வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் ஸ்ரீ கிருஷ்ணர் மஹாபாரதத்தில் தூது போகும் முன் திரௌபதியை சந்தித்தார்.     திரெளபதி தனக்கு நேர்ந்த அனைத்து துன்பங்களையும் அழுதுக் கொண்டே அவரிடம் சொன்னாளாம்.       ஏதும் தெரியாதவர் போல் அனைத்தையும் கேட்டு விட்டு   திரெளபதி எனக்கு எல்லாம் தெரியும்.இருந்தும் ஏன் அதை உன் வாயால் கேட்டேன் தெரியுமா?   நீ நன்றாக அழ வேண்டும்           நீ அழுதால் தான் துரியோதனன் விட்டு பெண்கள் அழுவார்கள். என்றாராம். (இது கதை) .             பெண்கள் அழக்கூடாது , அழ வைக்கக் கூடாது என்று பேசி வருகிறோம். ஆனால்  க்ருஷ்ணர்  அழ வைத்துப் பார்க்கிறார்.. இது ஏன்?       இதற்கும் காரணம் உண்டு. "அழுபவர்கள் பலஹீனமானவர்கள் ஆனால் அடிப்படையில் அன்பு மிகுந்தவர்கள் "    என்று மன உளவியல் நிபுணர்கள் சொல்வர்.          . இறைவனிடம் தன் குறையோ நிறையோ எனத சொல்லத் துணிகிறோமோ அதை நாம் முழு வீ...

மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்..!

Image
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும்.வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.ருத்ராஷ்வரேர் திருக்கோவில். இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம். தஞ்சாவூர் மாவட்டம். ஓம் நமச்சிவாயா. ""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி பல்விருகமாகி பறவையாய், பாம்பாய் கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய் வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் மெய்யே உன் பொன்னடிகள்  கண்டின்று வீடுற்றேன் ''...

Thanjavur Shivan Temple...!

பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்! பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மழை குன்றுகளை இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.  அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண்,நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார். இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினா...

உழவாரத் திருப்பணியின் மகிமை அறிவோம். உழவாரம் செய்வோம்.

ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.  இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு தயவு கூர்ந்து அந்த மட்டையை எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்க, தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கியவன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான...

நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்..!

Image
இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது. இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள். இதனால் ...

சிவ பெயர்ச்சி

Image
சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டுள்ளோம் சிவப்பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளோமா ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள் பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே "சிவப்பெயர்ச்சி" தை மாதம் கடைசி திங்கட்கிழமை சிவப்பெயர்ச்சி 10-2-2020 இந்த தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும் இன்றைய கலியுகத்தில் கடன் வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது. அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி. ஏழரை சனி  அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதம் கடைசி திங்கட்கிழமையே அனைத்து ராசியினரும்  சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபி...

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும்..!

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும் - உன் பலவீனத்தில் என் பலம்! பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது. கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா? அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார். வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை. அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ...

குடுத்தார் குடுத்தனவும்... இராஜராஜரே கூறியது....

Image
குடுத்தார் குடுத்தனவும்... எவ்வளவு நிதர்சனமான வார்த்தை இது.. இராஜராஜரே கூறியது.... தற்காலத்தில் இவ்வார்த்தைதான் நிதர்சனமானது. தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்து குவிந்த நிவந்தங்கள் மிகவும் பிரம்மாண்டம். அரசர் அவரது அக்கன், அரசனது தேவியர்,அதிகாரிகள்  மற்றும் பொது மக்கள், பொன்னாகவும், காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும், நிலங்களாகவும் வாரி வழங்கினார். நிவந்தமாக வந்தவற்றை கல்லில் வெட்டி ஆவணமாகப் பதிவு செய்கின்றனர். அரசனின் நேரடி வாய்மொழி உத்ரவாக இச்செய்தி கல்லில் வெட்டப்படுகிறது. கல்வெட்டு வாசகம். *********************** நாங் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுப்பார் குடுத்தனவும் கல்லிலே வெட்டி அருளுக" என்று கல்வெட்டு ஆரம்பமாகி நிவந்தங்களின் பட்டியல் பதிவு செய்யப்படுகிறது. வாரி வழங்கியுள்ளனர். யார் யார் கொடுத்தது.?  எவ்வளவு கொடுத்தார்கள்.? என்ன கொடுத்தார்கள்.? அனைத்தும் கல்வெட்டுகளாய் உள்ளன.. அரசன் கொடுத்த பொன்.. தேவியர் கொடுத்த படிமம். ஒரு இடையர் கொடுத்த ஆடு. யானைப்பாகர் கொடுத்த காசு.. என்று ப...

உறக்கமின்றி இருந்த ராசராசன்..!

அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,                     "உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும்  பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்" என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,                  "உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்" என்பதாகும். இடைச்சியின் நிழல் என்பது "இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்" கோபுரத்தின் மேல் இருப்பதாகும். "பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா" என்று கூறினார். இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியைக் கூற அவர், "நானோ எளியவன். அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவை...