மாசி மாத சிறப்புகள் !
🌷மாசி மாதத்தில் மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன. 🌷திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. 🌷சிவராத்திரி சிவராத்திரி இறைவனான சிவப்பரம்பொருளை நினைத்து ஆராதனை செய்து வழிபாடு நடத்த மிக உயர்ந்த நாளாகும். இவ்வழிபாடு மாசிமாதத்தில் அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் பகல் இரவு வேளைகளில் விரத முறையினை மேற்கொண்டு சிவபெருமானை குறித்த பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறையினை மேற்கொள்வதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி பிறவாமை என்கிற மோட்சம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரி நாளன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. 🌷மாசி மகம் இவ்விழா மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி...