Posts

Showing posts from March, 2020

விதுரர் கேட்ட கேள்வி.

விதுரர் சந்தர்ப்பம் பார்த்து யுதிஷ்டிரரிடம் கேள்வி கேட்டார்"மகனே, ஒரு வேளை காட்டில் 🔥நெருப்புப் பற்றி எரிந்தால் எந்த மிருகம் மட்டும் பாதுகாப்போடு இருக்கும்". யுதிஷ்டிரர் பதில் சொன்னார்" தந்தையே, காட்டில் நெருப்புப்🔥 பற்றிக் கொண்டால் சுயேச்சையாகவும், பயமற்றும் சுற்றித் திரியக் கூடிய சிங்கம்,🐅🐆🐘🦌 புலி ,சிறுத்தை,யானை மற்றும் மிக வேகமாக ஓடக் கூடிய மான் போன்ற அனைத்து மிருகங்களும் காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் வளைகளில் வசிக்கும் எலிகள்🐀🐀🐀 மாத்திரம் அனல் தணிந்த பிறகு வெளியில் வந்து அமைதி நிறைந்த வாழ்க்கை வாழும்...!" மகனே ,யுதிஷ்டிரா உன் பதிலால் நான் கவலையற்றவன் ஆனேன். செல், பாதுகாப்பாக இரு, புகழுடன் இரு என்று ஆசீர்வாதம் கொடுத்தார். வைரஸ் கிருமி கூட ஒரு பயங்கர நெருப்புக்கு சமமாக உள்ளது.தொடர்ந்து அனைத்து எல்லையையும் தாண்டி விட்டது. இப்போது தன்னுடைய வீட்டிற்கு🏡 உள்ளேயே யார் இருப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் மேலும் உலகில் கவலையற்ற மகாராஜாவாக👸🤴🏼 வாழ்வார்கள். இது ஒரு லட்சுமண் ரேகை தாண்டாதீர். தாண்டினால் சோக வனம் 🌳தான். 14 ஆண...

திருத்தணி திருப்புகழ். சகல ரோக நிவாரணி..!

தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு, திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள். தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வறட்சியும் ,இருமலும், சளியும் உண்டாகிப் பின் கொரோனா எனும் நோயாகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணியில் பாடப்பட்டது. சகல ரோக நிவாரணி. "இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுள தாள்கள் அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!" மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும். இசையாகப் பாடி நலம் பெறுக வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

திருநீலகண்டப்பதிகம்

பதிகச் சிறப்பு:-  *"திருநீல கண்டம்"* என்பது சிவபெருமானாருடைய கண்டத்தை (கழுத்தை) குறிப்பதாகும்.  *நீலகண்டம் என்பது *"சிவாயநம, நமசிவாய" என்பதைப் போல அதுவும் பெருமானுடைய திருநாமம் ஆகும்.*  இந்த திருநீலகண்டம் என்னும் திருநாமத்தைச் சொல்லியே *"திருநீலகண்ட நாயனார்"* முக்தி பெற்றார், ஆகவே இந்த பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் திருநீலகண்டம் என்று சம்பந்த சுவாமிகள் ஆணையிட்டு சொல்லியுள்ளார். 🔆இந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் எந்தவிதமான நோய் தொற்றும், எந்தவிதமான காய்ச்சல்களும் அண்டாது.  மேலும் இப்பதிகத்தை நாம் சத்தமாக பாடுவதனால் அந்த ஒலி அலைகள் வீட்டில் உள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது. பண் : வியாழக்குறிஞ்சி       திருச்சிற்றம்பலம் (1)அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்..  உய்வினை நாடாது இருப்பது உந்தமக்கு ஊனமன்றே...  கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்...  செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா *திருநீலகண்டம்.* (2)காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்...  ஏவினையால் எயி...

கொரோனாவும் மகாபாரதமும்...!

கொரோனா காட்சிகளையும் அதற்கு மருந்து தனித்து தவமிருந்தல் யாதொரு பொருளையும் தொடாமலிருந்தல் எனும் தீர்வினை காணும்பொழுது மகாபாரத யுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகின்றது மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அசுவத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேஷித்த வரங்களும் எவனுக்குமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது அதாவது அவன் செத்தால் மானுட குலமே அழியும் இதுபோக பிரமாஸ்திரம், பாசுபத கனை ,நாராயண அஸ்திரம் என முமூர்த்திகள் வழங்கிய மிகபெரும் அழிவு ஆயுதம் அவனிடம் இருந்தது ஆனால் அவனின் பலம் அறிந்தோர் இருவரே ஒருவர் துரோணர் இன்னொருவர் கண்ணன். இதனாலே அஸ்வத்தாமனோடு உறவாடி துரியனுக்கு சந்தேகம் ஏற்படுத்தி அவன் படைதளபதி ஆகாதாவறு தடுத்தான் கண்ணன், தேர்ந்த ராஜதந்திரம் அது துரோணர் துரியோதனின் கொடுமதி அறிந்து அதை வெளிசொல்லவில்லை ஆம் அவர் நல்லவர், அஸ்வத்தாமனின் மிக பெரும் பலம் பற்றி அவர் அஸ்தாமனுக்கோ துரியனுக்கோ சொல்லவே இல்லை , விளைவுகளை அறிந்த ஞானி அவர் இதனால்தான் போரில் பீமன் சிங்கநிகர் அஸ்த்த...

கொரானா கொரப்பிடி எப்போது விலகும்?

14 வயதான அபிக்கியா ஆனந்த் என்ற இந்தியச் சிறுவன் அவருடைய யூடியூப் சேனலில் 22 ஆகஸ்ட் 2019ல் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுச் சொன்னார்.  அதாவது  பூவுலகம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்று சொன்னார். இந்த 6 மாத காலத்தில் உலகளாவிய வைரஸ் ஒன்று பரவி உலகையே பீதியில் ஆழ்த்தும் என்று சொன்னார்.  உச்ச கட்டமாக 31 மார்ச் 2020 அன்று உலகமே பீதியில் உறைந்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து நடுங்குமாம். ஆனால் ஒரு சிறு நிம்மதி.  29 மே மாதம் பூமி சுழற்சியில் இந்தக் காலக்கட்டத்தை விட்டு நகர்ந்து விடும்.  அதிலிருந்து இந்த வைரசின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வைரசின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனந்த் ஒரு அதிசயக் குழந்தை !  அவரைப் பற்றிப் பல பத்திரிகைகள் எழுதி உள்ளன.  2013ம் வருடம் இவருடைய திறமையை "இந்தியன் டைம்ஸ்" என்ற பத்திரிக்கை இவர், தான் ஒரு பெரிய வானசாஸ்திர நிபுணர் என்று சொல்வதை உண்மையா இல்லை கப்ஸாவா என்றறிய வான சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்துச் சோதித்துக் கூடப் பார்த்ததாம். பலரும் இவர...

கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் நுழைந்து என்ன செய்கிறது?

*நமது உடல் அதனை எப்படி துல்லியமாய்  கண்டுபிடித்து தன்எதிரியை எதிர்க்கிறது?* *அதையும் ஏமாற்றி கொரோனா எப்படி நம்மை தாக்குகிறது...* *செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!* அவசியம் படியுங்கள்...  உயிரிகளின் போராட்டம் புரியும்.... கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர் தான் கோவிட் -19 *வைரஸ் என்றால்?...* முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்...

ஆதித்ய ஹ்ருதயம்..!

Image
”ஆதித்ய ஹ்ருதயம்” மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம். இராவணனுடனான போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரம் இது. சூரியனின் ஆற்றலை, திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்து வந்தால் பகைகள் விலகும்; தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். ஆனால் இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும். அப்படிச் செய்ய எல்லாராலும் இயலுமா? சம்ஸ்கிருதம் தெரியாதவர்களால் இதைச் சரிவர உச்சரிக்க முடியுமா? முடியாது… அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும். இது உண்மை. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி! அருள் பொங்கும் முகத்தைக் காட்டி ...

கொரானா ஏன்? எப்படி? எதனால்?

ஒரு ஜோதிட நிபுணர் முறையில் ஆராய்ச்சி செய்து அளித்த அருமையான பதிவு. கொரோனா வைரஸ் ? ஏன் ? எதனால் ? எப்படி ? இதற்கான தீர்வு ? இப்படி பலகேள்விகள்... காரணமும், தீர்வும் கூற முயற்சிக்கிறேன். அமுதம் பெறுவதற்காக பார் கடலை கடைந்தபோது, கயிறாக பயன்பட்ட வாசுகி என்ற பாம்பு,  தன் வலி பொறுக்காது விஷம் கக்கிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் ! இப்பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை வாய்ந்த அவ்விஷம் பரவிடக்கூடாது என்பதற்காக, வினை தீர்க்கும் வித்தன், விடமுண்ட கண்டனானான் ! ஆம் நீச குணமுடைய விஷத்தை நம் ஈசன் பருகிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் ! அன்று வாசுகி கக்கிய அதே நட்சத்திரத்தில், அரவம் ராகு தற்போது  அமர்ந்திருந்து தனது அசுர விஷத்தை  உலகெங்கும் பரப்பி வருகிறது. இதற்கான முதல் முடிச்சு எப்பொழுது விழுந்தது ? 11.09.2019 அன்று அசுரன் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்று  ராகுவிற்கு ஆறு, எட்டில் கிரகங்கள் இல்லாதிருந்தால் விஷம் கக்கும் நிலை தோன்றியிருக்காது. நமது போறாத காலம்,  அன்று ராகுவிற்கு  ஆறில் தேவ பிரகஸ்பதி குரு விருச்சிகத்திலும், எட்டில் ராகுவை காட்டிக் க...

கோவிலின் அருமை தெறியுமா???

Image
சீனாவிற்கு அடுத்தபடியாக அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா. இத்தாலி தாலியறுத்து கிடக்கின்றது, பிரிட்டன் பலிகொடுக்க தொடங்கிவிட்டது, ஸ்பெயினில் விக்கெட்டுகள் மூன்றாம் அம்பையருக்கு அனுப்பபட்டாயிற்று, ஜெர்மன் மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கின்றது. தேவாலயங்கள் மூடபட்டாயிற்று, ஞாயிறு திருப்பலிக்கு வராதது சாவுக்கு ஏதுவான பாவம் என சொல்லும் கிறிஸ்தவம், தேவாலயம் வந்து சாகவேண்டாம் என கதவினை அடைத்துவிட்டது. திருப்பலியும் இல்லை நற்கருணையும் இல்லை, பாவ மன்னிப்புமில்லை. கிறிஸ்தவ வழிபாடு யூத வழிபாட்டின் தொடர்ச்சி, அதாவது கூட்டு வழிபாடு, மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்ககள், கொஞ்ச நேரம் எடுக்கும் விஷயம் என்பதால் நோய் பரவ வாய்ப்பு என முடிவெடுத்தாயிற்று இந்நிலையில் இந்துக்களின் ஆலய பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள், ஆச்சரியமான விஷயங்கள் புலப்படும் கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை.  மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம்.  இந்து ஆலயங்கள் வழிபாட்டுக்கு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய்பரவும்...

இராமாயணத்தில் உள்ள இரண்டு தியாக உள்ளங்கள்..!

இராமாயணத்தில் உள்ள இரண்டு தியாக உள்ளங்கள், இதைப் படித்தால் தெரியும்.* *தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.* *இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.* *விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.* *அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார்.* *பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வ...

காத்திருக்கப் பழகு !

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு கனி கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை கா...

கொடுப்பவர் அல்ல கடவுள் கொடுக்க வைப்பவர் தான் கடவுள்.

 முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை...  ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்...  ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்... அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்து வந்தார்கள்...  அரசன் அவர்களிடம் இவற்றிலிருந்து இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்தது காரணம் என்ன? என்று கேட்டான் அரசன்...  அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன்." அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான். இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால்தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை ...

சைவ உணவே மனிதகுல உணவு !

இக்கட்டுரையின் நோக்கம் : >--> இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுவோர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம். 1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்? 2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா? 3. முட்டை ஏன் அசைவம்? 4. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா? 5. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்” முக்தி பெற்றார்? 6. சைவ உணவு அல்லாது சில சித்தர்கள் அசைவ உணவு உண்டதாக சொல்வது உண்மையா? 1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்? இரையை மட்டும் தேடுதல் விலங்கியல். இரையோடு இறையையும் தேடுவதே மானிடவியல். சுத்த சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையை தேட நாம் மேற்கொள்ளும்  முதல் படி. சைவ உணவு தான் இறை அருளை பெற்று தரும். சைவ உணவே சன்மார்க்க உணவு. மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் ...