வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா?🕉️
வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? உலகில் மிகவும் தொன்மையான, தனித்துவம்வாய்ந்த கலாச்சாரங்களில் ஒன்று இந்தியர்களின் கலாச்சாரம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களில் பல மற்றவர்களுக்கு வித்தியசமானதாக தெரியலாம். அப்படி நம்முடைய பழக்கவழக்கங்களில் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தெரியும் ஒரு முக்கியமான பழக்கம் பெரியவர்களின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதாகும்... இந்திய கலாச்சாரத்தின் படி வயதில் பெரியவர்களின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது என்பது அவர்கள் மீது இருக்கும் மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. ஆனால் இதன்மீது மாற்றுக் கருத்துக்களும், விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. காலை தொட்டு கும்பிடுவது சுகாதாரமற்றது என்றும், பெரியவர்களின் மீதிருக்கும் மரியாதையை வெளிப்படுத்த வேறு வழிகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் இதன் அர்த்தம் என்ன, அதன் பலன்கள் என்ன என்று பார்க்கலாம். உடலின் அடித்தளம் நமது உடலின் அடித்தளம் என்றால் அது நமது கால்கள்தான். ஒருவர் நிற்கும்போது அவர்களின் ...