பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன்...


*சித்திரை மாத பவுர்ணமி*

எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

*வைகாசி மாத பவுர்ணமி*

 முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

*ஆனி மாத பவுர்ணமி *

 காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

*ஆடி மாத பவுர்ணமி*

 கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.

*ஆவணி மாத பவுர்ணமி*

 அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

*புரட்டாசி மாத பவுர்ணமி*

 இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம்.

*ஐப்பசி மாத பவுர்ணமி*

 அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

*கார்த்திகை மாத பவுர்ணமி*

 கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

*மார்கழி மாத பவுர்ணமி*

 ஆருத்ரா திருநாள். அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

*தை மாத பவுர்ணமி*

தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

*மாசி மாத பவுர்ணமி*

 மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

*பங்குனி மாத பவுர்ணமி*

 பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் - வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும்.

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?