திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் கொடுப்பது ஏன்?
திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத் தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால்... கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும்... அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே. வெறுமனே கையால் கொடுத்தால்.. கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்ற கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். இதே முறை தான் ஒருவரை அழைப்பதிலும் இன்று வரை கடை பிடிக்கப்படுகிறது.