இந்து ஆன்மீக பயிற்சி முகாம்

மாணவ மாணவியருக்கு கோடைக்கால இந்து ஆன்மீக பயிற்சி முகாம்  (இல்லத்திலிருந்தபடியே)


ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு சமயபோதனை பயிற்சி முகாம் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இவ்வாண்டு கொரோனா பதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அவரவர் வீட்டிலிருந்தபடியே இந்து சமய பக்தி பாடல்கள்,  தோத்திரங்கள், திருமுறை,  திவ்யப்ரபந்தம்,மற்றும் பக்திக்கதைகள் என பல அரிய விஷயங்களை தொகுத்து போதிக்க ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உங்கள் வீட்டு குழந்தைகள் வீட்டில் வீணே தொலைக்காட்சி,  கைபேசி விஷயங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை அறிவதற்கு ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அற்புதமான இந்த திட்டத்தை ஏற்படுத்திஇருக்கிறார்கள். கல்லூரி வரை படிக்கும் மாணவ மாணவியர் கலந்துகொள்ள அழைக்கிறோம்.  ஆர்வமிருப்பவர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்பவர்கள் தங்கள் குழந்தைகள் பெயர், கல்வி, முகவரி,  கைபேசி எண் குறிப்பிட்டு கீழ்க்கண்ட எண்களில் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பலாம்.

திருமதி.ரஞ்சனி - 9940045965

திருமதி.கௌரி வெங்கட்ராமன் - 9080588620

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்  - 9789007401

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?