மத்த இடத்தில் பிடிச்சு என்ன பிரயோசனம்?


ஒவ்வொரு புகழ் வாய்ந்த பெரிய கோயிலின் அருகிலோ எதிரிலோ ஆஸ்திகர்களின் மனம் புண்படும் படியான வாசகங்களை கண்டிருப்பீர்கள். காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் எதிரிலுtம் உண்டு.

ஒரு முறை மகா பெரியவர் காமாட்சியம்மன் கோயில் குளத்தில் ஸ்நானம் செய்ய சென்றார்.

அப்பாது அங்கே கடவுள் மறுப்பாளர்கள் எதிர்மறை வாசகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றார்கள். பெரியவருடன் வந்தவர்கள், அவ் வாசகங்களை கண்டால் பெரியவர் மனம் புண்படுமே என்று பதைபதைத்துப் போனார்கள். அவை பெரியவர்களின் கண்களில் பட்டுவிடாத வண்ணம் மறைத்து கொண்டார்கள்.

ஆனால் பெரியவர் கண்ணுக்கு தப்பாமல் ஒருவிஷயம் நடந்து விடமுடியுமா என்ன!

ஸ்நான சங்கல்பம் துவங்கும் முன்பு ஒருவரை அழைத்து, 'கடவுள் மறுப்பாளர் கூட்டத்தில் பொறுப்பாளரைப் போய் பார்த்து, அவர்கள் வேறெங்காவது ப்ரச்சாரம் செய்யாமல் நாம் இருக்கும் இடத்தை தேடிவந்து எதற்காக செய்கிறார்கள் என்று கேட்டுக் கொ்டு வா' என்று அனுப்பினார்.

அவருக்கு விருப்பமில்லை என்றாலும் பெரியவா வார்த்தைக்காக போனார். கடவுள் மறுப்பாளர் என்ன சொன்னார் என்று தெரியுமா?

"பெரியவர் மேல நிறைய மரியாதை உண்டுங்க.. ஆனால் இந்த பேனரையெல்லாம் மத்த இடத்தில் பிடிச்சு என்ன பிரயோசனம்? கோவில் எதிர பெரியவர் எதிரேன்னு பிடிச்சு, அதை படம் பிடிச்சு காமிச்சாதான், இவ்வளவு பேர் கூடுன கூட்டத்தில நாம் பிரச்சாரம் செய்தோம்னு எங்களுக்கு மேலிடத்திலேர்ந்து பணம் ஏதாவது வரும். மேற்கொண்டு பிழப்ப பாக்கணுமே.. இருந்தாலும் பெரியவர் மனம் வருத்தப்படும்னா நாங்க வேற இடத்துக்கு போறோம்." என்றார்.

அவர் அப்படியே போய் பெரியவரிம் சொன்னார்.

பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார், "நாம ஒன்னுமே பண்ணாமலே, நம் எதிரிலே நின்னாலே அவாளுக்கு வயத்து  பொழப்புக்கு ஆகும்னா அதை நாம ஏன் தடுக்கணும்? இனிமே நாம எங்கே போனாலும் அவாளை வந்து பேனர் பிடிக்கச் சொல்லு. அம்பாள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக படியளக்கறா.. அவாளுக்கும் குடும்பம் இருக்கே.." என்றார்.

பெரியவா பெரியவாதான்.

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?