திருத்தணி திருப்புகழ். சகல ரோக நிவாரணி..!

தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு, திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள்.
தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வறட்சியும் ,இருமலும், சளியும் உண்டாகிப் பின் கொரோனா எனும் நோயாகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணியில் பாடப்பட்டது.
சகல ரோக நிவாரணி.

"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"

மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
இசையாகப் பாடி நலம் பெறுக

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?