சாமிசிலைக்கு காது கேட்குமா?
கொஞ்ச நாள் முன்பு கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். அப்போது கணவன், மனைவி தன் ஒரு எட்டு வயது பெண் குழந்தையுடன் என் அருகில் நின்றிருந்தனர். அப்போது ஒருவர் சுவாமி சிலையை பார்த்து ஏதோ புலம்பிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை தன் தாயை பார்த்து சாமி சிலைக்குக் காது கேட்குமா? நாம் சொல்வது அவர்
காதில் விழுமா! என்று கேட்டது. எனக்கு அப்போது அந்தக் குழந்தை கேட்பதிலும் ஏதோ ஓர் அர்த்தம் இருப்பதாகத்தோன்றியது. உண்மையிலேயே கல் சிலைக்கு காது கேட்குமா. நாம் சொல்வது கேட்குமா என்பது தான்.
அப்போது அவர் கையில் உள்ள செல்போன் மணி அடித்தது. அதை எடுத்து அவர் ஹலோ யார் பேசுகிறது என்று கேட்கிறார். மதுரையில் இருந்து அவருடைய நண்பர் பேசுவதாகக் கூறுகிறார். சாதாரண அரை ஜான் நீளமுள்ள
பிளாஸ்டிக் டப்பா இவர் சொல்வது மதுரையில் உள்ள ஒருவருக்குக் கேட்கிறது. அவர் சொல்வது இவருக்குக் கேட்கிறது. ஏதோ ஒரு சக்தி இவர்கள் இருவருக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல் தான்
கடவுள் சிலையும் பக்தர்கள் கூறும் வேண்டுதல்களையும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்கிறது.
பொதுவாக செல்போன் இயக்கத்தைப் பார்ப்போம். சாதாரண களிமண் (Celcon Diode - Semi Conductor) இதை இயக்குகிறது. நாம் பேசுகிற வார்த்தையை செல்போன் வாங்கி அதை அருகில் உள்ள செல்போன் டவருக்கு அனுப்புகிறது.
டவர் அதை மெயின் டவருக்கு அனுப்புகிறது. அது அதை நேரடியாக வானத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சேட்லைட் டிற்கு அனுப்புகிறது. சேட்லைட் அதை மதுரையில் உள்ள டவருக்கு அனுப்புகிறது. டவரில் இருந்து ஒலி அலைகள் நேரடியாக டவர் வைத்திருக்கும் செல்போனிற்கு இணைப்பு
கொடுக்கிறது. இவையெல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்து விடுகிறது. இப்படி ஒரு சாதாரண டப்பாவில் பேசுவதே எங்கோ இருக்கும் வேறொரு டப்பாவில் கேட்கும் போது யுகம் யுகமாக மண்ணிலேயே வளர்ந்து பஞ்ச பூதங்களாலும் நவ கோள்களாலும் சக்தியூட்டப்பட்ட ஒரு பாறை, அதில் செதுக்கப்பட்ட ஒரு சிலைக்கு நாம் சொல்வதை கேட்கும் சக்தி இருக்காதா.
கோயில் கர்ப்ப கிரகத்தில் உள்ள சிலைக்கு மேல் உள்ள கோபுர கலசமே டிரான்ஸ்மீட்டர். கொடி மரமே ரிசீவா் கடவுள் சிலை முன்பு நின்று நாம் கூறுகின்ற வேண்டுதல்களை சிலை கோபுரத்தின் வழியாக டிரான்ஸ்மிட் செய்கிறது. அது பிரபஞ்சத்தில் உள்ள நவகோள்களுக்கும் சென்று பிரபஞ்சத்திலுள்ள கோள்களிலிருந்து நமக்கு நிவர்த்திகளைப் பெற்று தருகிறது. நாம் கருவில் இருக்கும் போதே நமக்கும் கோள்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய வாழ்நாள் முழுமையும் கோள்கள் ஆதிக்கத்தின் படிதான் நமக்கு நல்லது கெட்டது எல்லாம் நடக்கிறது. நாம் கடவுளிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாமே நவகோள்களின்
சக்தியைப் பெற்றே நம்முடைய தசாபுத்திகளுக்கு ஏற்ப நமக்கு நல்ல பலன்களும் வேண்டிய கெடு பலன்களும் நடைபெறுகின்றன.
சிவாயநம. ..
திருச்சிற்றம்பலம்...

Comments
Post a Comment