ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம்🕉️🕉️🕉️


ஸ்ரீகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்...


ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர் , அவரது சகோதரர் பலராமர் , அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.
நடு இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு  செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் ,  மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும் , ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ணரும் , பலராமரும் தூங்கச் செல்ல , அர்ஜுனன் காவல் இருந்தான்.

அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும் , தூக்கிய பற்களும் , முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும் , அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.

அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் , அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் , அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக , அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ,  ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி , அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது.

அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.

பின் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு , அவ்வுருவம் மறைந்து
விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார்.

அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.bஅதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ?! என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும் , அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான் ,  என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே , சண்டை போட்டார். கிருஷ்ணர் , சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும் , அர்ஜுனனும் எழுந்தனர்,
.
இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி , நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்.
உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது
நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் , இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு , புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால் , அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

"கோபத்தைக் குறைப்பவனே ஞானி " என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணரின்  இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்

இப்படித் தான் நாம்  பற்பல விஷயங்களுக்கு , நாம் ரியாக்ட்  செய்யாமல் இருந்தாலே அந்த விஷயம் , பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றும் இல்லாமல் போய் விடும்

முயன்று தான் பார்ப்போமே...

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?